தமிழ்ப்பள்ளிகளுக்குத் திருவள்ளுவர் சிலைகள் வழங்கும் நிகழ்ச்சி!
- THINAGAREN SANGGAREN
- 20 Jul, 2026
ஜூலை 20,
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்குத்
தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.ஜி.பி நிறுவனத்தின் திருவள்ளுவர் சிலை வழங்கும் நிகழ்ச்சி
இன்று காலை சிலாங்கூர் PJS
1 தமிழ்ப்பள்ளியிலும், WAWASAN TUN SAMBANTHAN தமிழ்ப்பள்ளியிலும்
நடைபெற்றது. வி.ஜி.பி நிறுவனத்தின் இயக்குநரும் உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான
வி.ஜி. சந்தோசம் தலைமையில் ஓம்ஸ் அறவாரியத்தின் தோற்றுநர் ஓம்ஸ் பா தியாகராஜன், மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு
இயக்கத்தின் தலைவர் தமிழ்த்திரு. ப.கு.சண்முகம், தமிழ்நாட்டைச் சேர்ந்த
மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.மல்லை சத்தியா, உலகத் தமிழ்ப்பானண்பாட்டு
இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் இராஜ ரத்தினம், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின்
முன்னாள் அமைப்பாளர் திரு.க.முருகன் தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து
சிறப்பித்தனர்.
தலைமையுரையாற்றிய
வி.ஜி.பி நிறுவனத்தின் இயக்குநரும் உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான வி.ஜி. சந்தோசம், தமிழ்ப்பள்ளி மாணவர்களின்
அமைதியும் கட்டொழுங்கும் மன நிறைவாக இருப்பதாகவும் திருவள்ளுவரின் உருவச் சிலை என்பது
பொதுமறைக்கான சின்னம் என தெரிவித்தார். இன்று காலை PJS 1 தமிழ்ப்பள்ளியிலும் நண்பகல்
WAWASAN TUN SAMBANTHAN தமிழ்ப்பள்ளியிலும் திருவள்ளுவரின் உருவச் சிலை
நிறுவப்படுகிறது.
நாளை சிலாங்கூர் சீபில்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியிலும், நாளை நண்பகல் சிலாங்கூரில்
உள்ள தெலோக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளியிலும், புதன் கிழமை கிள்ளானில்
உள்ள ஜாலான் மேரு தமிழ்ப்பள்ளியிலும் நண்பகல் காப்பாரில் உள்ள வலம்பொரோசா தமிழ்ப்பள்ளிலும்
என தொடர்ந்து 3 நாள்களுக்கு வள்ளுவரின் திரு உருவச் சிலை 6 தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படவிருப்பதாக
தெரிவித்தார்.
மலேசியாவில் முதலாம்
திருக்குறள் மாநாடு நடைபெற்ற போது பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவரின் சிலை வைப்பதற்கு
ஏராளமானச் சிக்கல்கள் எழுந்ததை ஓம்ஸ் பா தியாகராஜன் சுட்டிக்காட்டினார். ஆனால் இப்போது
நம்முடைய பிரதமரின் ஆட்சியில் தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவரின் சிலைகள் அதிகாரப்பூர்வமாக
நிறுவப்படுகிறது.
அண்மைய்யிலும் ஜொகூரில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை
வைக்கப்பட்டது சர்ச்சையானது. ஆனால் கல்வி அமைச்சு தலையிட்டு, தமிழ்ப்பள்ளிகளில்
திருவள்ளுவர் சிலை வைப்பதில் எந்தவோர் பிரச்சனையும் இல்லை என்றும் தாராளமாக வள்ளுவரின்
சிலையைத் தமிழ்ப்பள்ளிகளில் வைக்கலாம் தெரிவித்ததையும் ஓம்ஸ் பா தியாகராஜன் சுட்டிக்காட்டினார்.
வி.ஜி.பி நிறுவனத்தின்
இயக்குநரும் உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான CHEVALIER வி.ஜி. சந்தோசம், போன்றவர்கள் மலேசியாவில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்காகத் தன்னுடைய 90-ஆவது
வயதிலும் கடல் கடந்து வந்திருக்கிறார். வி.ஜி. சந்தோசம் அவர்களின் தந்தை ஞான திரவியம்
அவர்கள் இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி, மலேசியாவின் பினாங்கில்
8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்.
இப்போது அவருடைய மகன் இதே மலேசியாவில் 6 தமிழ்ப்பள்ளிகளில்
6 திருவள்ளுவர் சிலைகளை நிருவியிருக்கிறார். வி.ஜி. சந்தோசம் அவர்களின் தலைமையில் உலகம்
முழுவது 199 திருவள்ளுவர் சிலைகள் நிருவப்பட்டிருக்கும் நிலையில் நாளை சிலாங்கூர் சீபில்ட்
தமிழ்ப்பள்ளியில் 200 ஆவது திருவள்ளுவர் சிலை நிருவப்படவிருக்கிறது.
மலேசியத் தமிழ்ப்பள்ளிக்குக்
கிடைத்த இப்படியான ஓர் அருமையான வாய்ப்பை நாம் அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும்.
நாளை காலை 9 மணிக்குச் சிலாங்கூர் சீபில்ட் தமிழ்ப்பள்ளிக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும்
திரண்டு வரும்படி மலர்.டி.வியின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

