ராஜாஜி தமிழ்ப்பள்ளி புதிய நிலத்தில் நவீனமாகக் கட்டப்படும்! பினாங்கு முதலமைச்சர் உறுதி!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 20,

பினாங்கில் உள்ள ராஜாஜி தமிழ்ப்பள்ளிக்குப் புதிய நிலம் வழங்கப்பட்டிருப்பதாகப் பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow தெரிவித்தார். மேலும் ராஜாஜி தமிழ்ப்பள்ளி நவீன முறையில் கட்டப்படும் என அவர் உறுதியளித்தார். கோயில் நிலத்தில் இருந்து வந்த ராஜாஜி தமிழ்ப்பள்ளி தற்போது முழுமையாகச் சொந்த நிலத்தில் மாற்றியமைக்கபடும் என்றும் இது குறித்து பள்ளி மேலாளர் வாரியம், பள்ளி நிர்வாகத்துடன் முழுமையாகச் சந்திப்புகளை நடத்தியதாகவும் Chow Kon Yeow தெரிவித்தார். 

இந்த நிலம் பள்ளி மேலாளர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் மாநில அரசின் உதவியுடன் மாநிலக் கல்வி இலாகா ராஜாஜி தமிழ்ப்பள்ளிக்கான புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும் இது விரைந்து மேற்கொள்ள பினாங்கு மாநில அரசு ஆதரவளிக்கும் என Chow Kon Yeow நம்பிக்கை அளித்தார். இந்த புதிய கட்டிடம் அடுத்த ஆண்டு ஜனவரி தொடங்கும் என்றும் இதற்காகத் தமிழ்ப்பள்ளி நிர்வாகம் எந்தவொரு தரப்பிடமிருந்து நிதி கோரிக்கைகளை முன்வைக்க வேண்டாம் என்றும் நிலமும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான செலவீனங்களுக்கும் மாநில அரசின் பொறுப்பு என்றும் Chow Kon Yeow நம்பிக்கை தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *