பேராக்கில் நச்சு உணவால் 134 மாணவர்கள் பாதிப்பு! நீதிமன்றம் விசாரணை! – அ.சிவநேசன் அதிரடி!
- Thina S
- 01 Oct, 2024
பேராக்கில் உள்ள
SK Chepor எனும் ஆரம்பப் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் நச்சுத் தன்மையால்
பாதிக்கப்பட்ட 134 மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய
நிலையில் இன்று காலை பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் A Sivanesan பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்ததுடன் சம்மந்தப்பட்ட உணவு பராமரிப்பாளர்களுடன்
மாநிலச் சுகாதாரத் துறை அதிகாரிகளுடனும் பள்ளி நிரவாகத்தினருடனும் சந்திப்புக் கூட்டத்தை
நடத்தினார்.
பள்ளியின் சிற்றுண்டிச் சாலையில் வழங்கப்பட்ட உணவில் நச்சுத் தன்மை கொண்ட வேதியல் திரவங்கள் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பள்ளி உணவு பராமரிப்பாளரின் ஒப்பந்தம் உடனடியாக ரத்துச் செய்யப்படுவதாகவும், சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீதும் அதன் ஊழியர்களும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்கவிருப்பதாக A Sivanesan தெரிவித்தார்.
நீதிமன்ற வழக்குக்கான
முக்கிய ஆதாரங்களை மாநிலச் சுகாதார இலாகாவும், மாநிலக்
கல்வி இலாகாவும் முழுமையாகக் கொண்டிருப்பதால் அவர்களுடனானக் கலந்துரையாடலுக்குப் பின்னர்
இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது என பேராக் மாநிலச் சுகாதார, மனிதவள
ஒருமைப்பாட்டு, இந்தியச் சமூக விவகாரத் துறையின் ஆட்சிக் குழு உறுப்பினராக
A Sivanesan தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *