விஜய் சொல்வது தொடர்பான கேள்விக்கு, "நான் அதிகம் பேசமாட்டேன்-ஸ்டாலின்!

top-news
FREE WEBSITE AD

ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு அமைச்சர்கள், அதிகாரிகள், திமுகவினர் பலரும் வருகை தந்து அவரது சுற்றுப்பயணத்திற்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பற்றி நீங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது தொடர்பான கேள்விக்கு, "சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என பதிலளித்தார். 2026ஆம் ஆண்டில் தமிழக வெற்றி கழகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தான் போட்டி என விஜய் சொல்வது தொடர்பான கேள்விக்கு, "நான் அதிகம் பேசமாட்டேன். இதற்கெல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. பேச்சைக் குறித்து செயலில் நம்முடைய திறமையை காட்ட வேண்டும்" என்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *