சாலாவுடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை– ஆரன் ஸ்லாட்
- Tamil Malar (Reporter)
- 09 Dec, 2025
செய்தி -வெற்றி மைந்தன்
இத்தாலி, டிச. 9-
லிவர்புல் பயிற்சியாளர் ஆரன் ஸ்லாட், முகமது சாலாவுடனான தனது உறவில் எந்த விரிசலும் இல்லை என உறுதியாகத் தெரிவித்தார். இன்டர் மிலானுக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு எகிப்திய நட்சத்திரத்தை அணியில் சேர்க்காதது குறித்து எழுந்த சர்ச்சைக்கு அவர் பதிலளித்தார்.
முகமட் சாலா இத்தாலிக்கே அழைத்துச் செல்லப்படவில்லை. முதல் அணியுடன் பயிற்சி செய்த போதிலும் அவர் ஒதுக்கப்பட்டார். இதற்கு முன்பு லீட்ஸ் யுனைட்டெட்டுடன் 3-3 என சமநிலை ஆன போட்டியின்போது தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் அவர் பெஞ்சிலேயே அமரவைக்கப்பட்டார்.
அதனால் ஆத்திரமடைந்த சாலா, “நான் கிளப்பால் தூக்கி எறியப்பட்டது போல உணர்கிறேன். ஸ்லாட்டுடன் இனி எந்த உறவும் இல்லை” என கடுமையான கருத்து தெரிவித்திருந்தார்.
இருப்பினும் ஸ்லாட் அமைதியாகவே பதிலளித்து, இருவருக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்பதை தெளிவுபடுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



