இஸ்மாயில் ஹனியேவின் நல்லுடல் கத்தாரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது! மலேசியா பங்கேற்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ் 2: இஸ்ரேலிய படையினரால்  படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் இறுதி ஊர்வலம் கத்தாரில் நடைபெறவிருக்கிறது. 

இந்த இறுதி ஊர்வலத்தில் மலேசியாவைப் பிரதிநிதித்து உள்துறை அமைச்சின் துணையமைச்சர் ஷம்சுல் அனுவார் நசாரா கலந்துகொள்வார் என்று வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.  அவருடன் செனட்டர் முஜாஹித் ரவா மற்றும் உள்துறை அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. 

தோஹாவில் உள்ள IMAM MUHAMMAD IBN ABD AL-WAHAB மசூதியில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும், பின்னர் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *