என் பெயர் குட்டியா? அது ஜாஹிட்டின் கட்டுக்கதை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26: துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, குட்டி என்ற பெயரைப் பயன்படுத்தும்போது பொய் சொல்கிறார் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த பெயரில் எந்த அடையாள அட்டையும் (ஐசி) தனக்கு வழங்கப்படவில்லை என்று மகாதீர் கூறினார்.

நான் பிறந்தது முதல் நான் மருத்துவராகும் வரை, யாரும் என்னை அந்தப் பெயரில் அழைத்ததில்லை என்று 99 வயதான அவர் இன்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இஸ்கண்டார் குட்டியின் மகன் மகாதீர் என்ற பெயரைக் கொண்ட பழைய நீல ஐசியின் நகல் தன்னிடம் இருப்பதாக ஜாஹிட் கூறும் வரை அந்தப் பெயர் எங்கும் தோன்றியதில்லை என்றார்.

இது ஜாஹிட்டின் கட்டுக்கதை என்றும் அவர் கூறினார்.

ஜாஹிட் குட்டி என்ற பெயரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மகாதீர் ஜாஹிட் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார், இது தம்ம இழிவுபடுத்தும் வகையில் குறிப்பதாக மகாதீர் கூறினார்.

கடந்த  2017 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி சிலாங்கூர் கெலானா ஜெயாவில் நடந்த அம்னோ பிரிவு கூட்டத்தில் குட்டி என்ற பெயரை இழிவான முறையில் பயன்படுத்தி ஜாஹிட், தன்னை இழிவுபடுத்தியதாக மகாதீர் தனது றிக்கையில் குற்றம் சாட்டினார்.

தான்  ஒரு மலாய் முஸ்லிமாகப் பிறக்கவில்லை என்பதையும், இஸ்கண்டார் குட்டியின் மகன் மகாதீர் என்பதையும் குறிக்கும் வகையில் இந்த அறிக்கை இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *