PKR புதிய பொதுச்செயலாளர் ஃபுசியா சலே
- Shan Siva
- 16 Sep, 2024
பெட்டாலிங் ஜெயா, செப் 16: டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுக்குப் பதிலாக, புதிய பிகேஆர் பொதுச் செயலாளராக ஃபுசியா சலே நியமிக்கப்பட்டுள்ளதாக நிக் நஸ்மி நிக் அகமட் அறிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற பிகேஆர் மத்திய தலைமைக் குழு (எம்பிபி) கூட்டத்தில் முக்கிய பதவிகளை மறுசீரமைக்கவும், கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டதாக பிகேஆர் துணைத் தலைவருமான அவர் கூறினார்.
சைஃபுதீன் தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சைஃபுதீனுக்குப் பதிலாக ஃபுசியா சாலே தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று நிக் நஸ்மி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *