இந்தியா ஓபன்: கோ சுன் ஹுவாட்–ஷெவான் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
- Tamil Malar (Reporter)
- 15 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 15-
மலேசியாவின் கலப்பு இரட்டையர் ஜோடியான Goh Soon Huat–Shevon Lai Jemie, முதல் செட்டை இழந்தபோதும் அதிலிருந்து மீண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இன்று நடைபெற்ற இந்தியா ஓபன் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
உலக தரவரிசையில் 10-ஆவது இடத்தில் உள்ள இந்த ஜோடி, தாய்லாந்தின் Ruttanapak Oupthong–Jhenicha Sudaipraparat ஜோடியை 17–21, 21–15, 21–6 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. இந்த இரண்டாம் சுற்று ஆட்டம், நியூ டெல்லியில் உள்ள Indira Gandhi Sports Complex-இல் நடைபெற்றது.
கணவன்-மனைவி ஜோடியான கோ சுன் ஹுவாட், ஷெவான், முதல் செட்டில் தங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினர். எதிரணி ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்ததால், தொடக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்தனர். இருப்பினும், இரண்டாம் செட்டிலிருந்து ஆட்டத்தின் ஓட்டத்தை தங்களது பக்கம் திருப்பிய அவர்கள், அதிரடியான தாக்குதலும் உறுதியான பாதுகாப்பும் மூலம் போட்டியை முழுமையாக கைப்பற்றினர்.
போட்டி குறித்து கருத்து தெரிவித்த ஷெவான், “ஆட்டத்தின் தொடக்கத்தில் நாங்கள் சிரமங்களை எதிர்கொண்டோம். எதிரணியினர் வேகமாக விளையாடியதால் எங்கள் ரிதம் குலைந்தது. ஆனால் பின்னர் நாங்கள் நம்மைச் சரிசெய்து, நம்பிக்கையுடன் விளையாட முடிந்தது” எனக் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



