சூரியின் ‘மண்டாடி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஆக. 15 —

நடிகர் சூரி நடிப்பில் உருவாகி வரும் ‘மண்டாடி’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. ‘உசுரே நீதான் புள்ள’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

இப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கி வருகிறார். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்க்கை மற்றும் படகுப் போட்டிகளை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாகி வருகிறது. சூரிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.

படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான முதல் பாடலான ‘மண்டாடி மண்டாடி’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்தப் பாடலை வாஹீசன் ராசையா மற்றும் வி.எம். மகாலிங்கம் இணைந்து பாடியிருந்தனர்.

இந்நிலையில், இரண்டாவது பாடலான ‘உசுரே நீதான் புள்ள’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயஸ்ரீ மதிமாறன் பாடல் வரிகளை எழுதியுள்ள நிலையில், கபில் கபிலன் மற்றும் சஞ்சனா கல்மஞ்சே இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடல் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் மெலடியாக அமைந்துள்ளது.

‘மண்டாடி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *