அமைச்சர் நிர்மல் குமாருக்கு சபாநாயகர் கண்டிப்பு: சட்டப்பேரவையில் சலசலப்பு
- Surendran Sumdraraj
- 18 Aug, 2026
சென்னை: கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது, அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதன் மீது உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், கர்நாடக வனப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் தொடர்பான சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



