வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களுக்கான அஞ்சல் வாக்களிப்பு முறையை வலுப்படுத்த கோரிக்கை
- Surendran Sumdraraj
- 12 Aug, 2026
பெட்டாலிங் ஜெயா, ஆக. 12-
வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களிடையே அஞ்சல் வாக்களிப்பில் குறைந்த பங்கேற்பு காணப்படுவதையடுத்து, வெளிவிவகார அமைச்சும் தேர்தல் ஆணையமும் (SPR) அஞ்சல் வாக்களிப்பு முறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாநிலத் தேர்தலில் வெளிநாடுகளில் உள்ள வாக்காளர்களின் பங்கேற்பு கணிசமாகக் குறைந்துள்ளதாக குளோபல் பெர்சேத் தலைவர் நிர்மலா தேவி விண்ட்கெட்டர் தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, ஜொகூர் மாநிலத் தேர்தலில் வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கு வழங்கப்பட்ட வகை 1B அஞ்சல் வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 7,814 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு வெறும் 1,044 ஆகக் குறைந்துள்ளது.
இது 86.6 சதவீதம் என்ற மிகப் பெரிய சரிவாகும் என அவர் குறிப்பிட்டார்.
வகை 1B வாக்காளர்கள் என்பது மலேசியாவில் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளில் வசிக்கும் அல்லது தங்கியிருக்கும் நிலையில் அஞ்சல் வாக்குக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடைய மலேசியக் குடிமக்களைக் குறிக்கும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



