ஃபெல்டா முறைகேடு விவகாரம்: 7 விசாரணைக் கோப்புகள் திறப்பு – ‘ஓப்ஸ் ஃபெல்லா’ நடவடிக்கை தீவிரம்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப். 2 –

ஃபெல்டா மற்றும் அதன் துணை நிறுவனமான ஃபெல்டா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் சென். பெர்ஹாட் தொடர்பில் நிதி முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். ஏழு விசாரணைக் கோப்புகளை திறந்துள்ளதாக எஸ்.பி.ஆர்.எம். தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

‘ஓப்ஸ் ஃபெல்லா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பெரிய அளவிலான சிறப்பு விசாரணை, 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் ஃபெல்டா மற்றும் அதன் துணை நிறுவன நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு பரிவர்த்தனைகள் மற்றும் சொத்துகள் கையகப்படுத்தப்பட்ட விவகாரங்களை மையமாகக் கொண்டுள்ளது.

மொத்தம் ஏழு விசாரணைக் கோப்புகளில், ஆறு புதிய கோப்புகள் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி திறக்கப்பட்டன. மற்றொரு பழைய விசாரணைக் கோப்பு இன்னும் செயல்பாட்டில் உள்ளதுடன், அது பரஸ்பர சட்ட உதவி நடைமுறையின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

உண்மையான மதிப்பீட்டை விட அதிக விலையில் சொத்துகள் வாங்கப்பட்டதும், முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதும் தொடர்பாக ஆறு புதிய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அப்துல் ஹலிம் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *