தபோங் ஹாஜி விவகாரம்: எஸ்.பி.ஆர்.எம். விசாரணையில் இதுவரை 11 பேர் கைது
- Surendran Sumdraraj
- 02 Sep, 2026
புத்ராஜெயா, செப். 2 –
தபோங் ஹாஜி வாரியத்தைச் சேர்ந்த அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இதுவரை 11 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.
இந்தத் தகவலை எஸ்.பி.ஆர்.எம். தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் இன்று உறுதிப்படுத்தினார்.
புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தபோங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
அந்த விசாரணையின் ஒரு பகுதியாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்பாக எஸ்.பி.ஆர்.எம். விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்புடைய தரப்புகளின் வாக்குமூலங்கள் ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



