SAFE HOUSE யாருடையது? SPRM வெளிப்படையாக விசாரிக்குமா? பெரிக்காத்தான் MP சவால்!

top-news

அக்தோபர் 28,

லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM சோதனை நடத்தும் இடங்களின் விவரங்களைச் சோதனைக்குப் பின்னர் ரகசியமாக வைத்திருப்பது அச்சுறுத்தலானது என பெரிக்காத்தானின் கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் Dato' Dr. Ahmad Yunus bin Hairi குற்றம்சாட்டினார். 
கடந்த சில நாள்களுக்கு முன் SPRM அரசியல்வாதியின் SAFE HOUSE என நம்பப்படும் ஒரு வளாகத்திலிருந்து மில்லியன் கணக்கான பணத்தையும் சொத்தையும் பறிமுதல் செய்ததாகச் செய்திகள் வெளியானது. அது குறித்து SPRM தலைமை இயக்குநர் AZAM BAKI ஆமாம் என்றும் அரசியல்வாதிக்குத் தொடர்புடைய வளாகமா அது என்பதையும் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரையில் யார் அந்த அரசியல் தலைவர் என்பதையும் SPRM வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். இதன் பின் புலத்தில் எதிர்கட்சியின் தலைவர் இருப்பதாக வெளிவரும் செய்திகள் பரவுவதால் சம்மந்தப்பட்டவர்களுக்கு அது அதிருப்தியை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார். SPRM அதன் விசாரணைகளில் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் Dato' Dr. Ahmad Yunus bin Hairi வலியுறுத்தினார்.

Perikatan MP Dato' Dr. Ahmad Yunus bin Hairi mencabar SPRM untuk lebih telus dalam siasatan, menuduh SPRM merahsiakan lokasi siasatan selepas berita rampasan jutaan ringgit dan aset dari "safe house" seorang ahli politik tersebar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *