விளையாட்டு உடையில் RM155,000 லஞ்சம்! அரசு அதிகாரிகள் கைது!
- THINAGAREN SANGGAREN
- 07 Oct, 2026
அக்தோபர் 7,
சீருடை கொள்முதல் குத்தகையில் லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் மூத்த அரசு அதிகாரி ஒருவரும் மற்றொரு அதிகாரியும் தனியார் நிறுவன மேலாளரும் என மொத்தம் மூவர் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை கெடாவில் உள்ள லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு இரவு 9 மணிக்கு அம்மூவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெடா மாநிலத்தில் விளையாட்டுச் சீருடை கொள்முதல் குத்தகையைப் பெற RM155,000 ரிங்கிட் வரையில் லஞ்சம் பெற்றதாக 40 முதல் 50 வயதுக்குற்பட்ட மூவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க 5 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்க Alor Setar Majistret நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் 2 ஆண்கள் 1 பெண் என தெரிய வந்துள்ளது. கடந்த 2024 முதல் 2025 வரையில் ரொக்கமாகவும் வங்கியின் மூலமாகவும் லஞ்சம் பெற்றதாகத் தெரிய வந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

