இஸ்ரேலின் அட்டூழியம்! மத்திய கிழக்கு நாடுகளுக்கு அன்வார் அழைப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 2: மத்திய கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளும், பிராந்தியத்தை சீர்குலைக்கும் உச்சக்கட்ட பதற்றங்களை அவசரமாகத் தணிக்குமாறு மலேசியா வலுவாக அழைப்பு விடுத்துள்ளது.

அனைத்து சம்பந்தப்பட்ட தரப்பினரையும் பகைமையைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவும், பரந்த பிராந்திய மோதல் வெடிப்பதைத் தடுக்க தேவையான நிலைமைகளை ஏற்படுத்தவும் மலேசியா வலியுறுத்துகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

லெபனான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்கள், காசா மற்றும் மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அதன் கொடூரமான அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலை செயல்களில் இருந்து உலகளாவிய சமூகத்தின் கவனத்தை திசை திருப்பும் திட்டமிட்ட முயற்சிகள் என்று அன்வார் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *