அஜித்துக்கு ஜோடியாகிறாரா ஸ்ரீலீலா?
- Muthu Kumar
- 21 Feb, 2026
'குட் பேட் அக்லி' படத்தின் வணிக வெற்றிக்குப் பிறகு, மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் நடிகர் அஜித் இணைய உள்ள புதிய படம் 'AK64' என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாதபோதிலும், படத்தைச் சுற்றிய அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல், அஜித்துக்கு ஜோடியாக தெலுங்கு திரையுலகில் சென்சேஷனாக விளங்கும் நடிகை ஸ்ரீலீலா நடிக்க வாய்ப்பு அதிகம் என சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'குட் பேட் அக்லி' படத்திற்கும் அவர் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அந்த வாய்ப்பு பின்னர் பிரியா பிரகாஷ் வாரியருக்கு சென்றது. இந்நிலையில் AK64 வாய்ப்பு அவருக்கு கிடைக்கலாம் என்ற தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
AK64 படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது. தயாரிப்பாளராக ராகுல் இருப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைவார் என பேசப்படுகிறது. அஜித்-அனிருத் கூட்டணி முன்னதாக பல ஹிட் ஆல்பங்களை வழங்கியுள்ளதால், இந்த இணைப்பு மீண்டும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீலீலா எடுத்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால், AK64-ல் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலுக்கு வலு சேர்த்துள்ளது. சில வட்டாரங்கள் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறுகின்றன.
இன்னும் படக்குழுவினரிடமிருந்து உறுதி செய்யப்பட்ட அறிவிப்பு வெளியாகவில்லை. இருந்தாலும், AK64 குறித்த இந்த தகவல்கள் அஜித் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



