ரொட்டி சனாயில்கூட சர்க்கரையா? அன்வார் கேள்வி

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு. அக் 1: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், கிளந்தான் மக்கள் தினசரி உணவுகளில் சர்க்கரை உட்கொள்வதைக் குறைக்குமாறு இன்று வலியுறுத்தினார்.

நாட்டிலேயே அதிக சர்க்கரை நோயாளிகள் உள்ள மாநிலங்களில் ஒன்றாக கிளந்தான் இருப்பதை பிரதமர் எடுத்துரைத்தார்.

சிட்டி கதீஜா வெட் மார்கெட்டில் வர்த்தகர்களுடனான சந்திப்பு மற்றும் வாழ்த்து அமர்வில் பேசிய அன்வார், கெடா மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களிலும் நீரிழிவு விகிதம் அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

"ரொட்டி சனாய்' சாப்பிடும் போது கூட கிளந்தான் வாசிகள் சர்க்கரை சேர்க்க விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்ட அன்வார், முடிந்தால், அதன் அளவைக் குறைக்க முயற்சி செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *