பதின்ம வயது சிறுவன் பாலியல் வழக்கில் GISBH தொடர்புடைய நபர் குற்றம்சாட்டப்பட்டார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 14:

GISBH நிறுவனத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒருவர், பட்டர்வொர்த்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் பதின்ம வயது  பையனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.

24 வயதான மிக்தாம் அமீர், நீதிபதி சுல்ஹாஸ்மி அப்துல்லா முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது குற்றத்தை மறுத்தார்.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14(a) இன் கீழ் இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிக்தம் ஹாஸ்டல் வார்டனாக இருந்தபோது 13 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். 2022 ஆம் ஆண்டு, 11 ஆம் தேதி, நள்ளிரவில் பினாங்கு நிபோங் தெபாலில் உள்ள ஜாலான் பாகன் புவாயாவில் உள்ள ரூமா ஜகான் ஹரப்பான் அல் மஹாப்பாவின் விடுதி அறையில் இந்தக் குற்றம் நடந்ததாகக் கூறப்படுகிறது!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *