ஞாயிறு : 13 ஏப்ரல், 2025
10 : 40 : 44 PM
முக்கிய செய்தி

சூர்யா 45 படத்தில் வில்லனாக நடிப்பது அந்த படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜியா?

top-news
FREE WEBSITE AD

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். காக்க காக்க கஜினி நந்தா,வாரணம் ஆயிரம்,, சிங்கம்,ஏழாம் அறிவு, அயன் என ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்.ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அவர் நடித்த 12 படங்களில் ஜெய்பீம் சூரரைப் போற்று ஆகிய 2 படங்கள் மட்டுமே வணிக ரீதியான வெற்றிப் படங்களாக இருந்தன.இந்த 2 படங்களும் ஓடிடி தளத்தில் வெளியானவை என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால் இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா பூஜா ஹெக்டே நடித்துள்ள ரெட்ரோ படம் காதல் களத்தில் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகி, வாய் பேசாத கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதனால் இந்த படம் மாஸ் ஹிட்டாக சூர்யாவுக்கு அமையலாம்.

அதே போல் இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். கோவையில் கடந்த ஒரு மாதமாக ஷூட்டிங் நடத்தப்பட்டது. இதில் சூர்யாவுடன் திரிஷா,ஷிவதா லப்பர் பந்து நடிகை சுவாசிகா, நட்டி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதையடுத்து அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங் சென்னையில் துவங்குகிறது.

இதற்காக சென்னையில் பெரிய அளவில் கோர்ட் ஷெட் அமைக்கப்பட்டு, அங்கு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா வக்கீல் கேரக்டரில் நடிக்கிறார். ஜெய்பீம் படத்தில் வக்கீல் கேரக்டரில் சூர்யா நடித்த நிலையில், அந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா வக்கீல் கேரக்டரில் நடித்தும் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

அதனால் சூர்யா 45வது படத்தில் எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் இரண்டில் எந்த வக்கீல் சென்டிமென்ட் கைகொடுக்கப் போகிறது என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும். அதே நேரத்தில் இப்போது லேட்டஸ்ட் தகவலாக, சூர்யா 45 படத்தில் வில்லனாக நடிப்பது அந்த படத்தின் ஆர்ஜே பாலாஜி என்பதும், வக்கீல் சூர்யாவுக்கு எதிரான வக்கீல் கேரக்டரில் வில்லனாக படத்தில் வருவதே அவர்தான் என்றும் தெரிய வந்துள்ளது. படத்தின் டைரக்டரே வில்லனாக நடிப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *