தனுஷின் டி55 படத்தில் இவர்தான் ஜோடியா? யார் இசையமைப்பாளர்!

top-news
FREE WEBSITE AD

அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமாரின் இயக்கத்தில்  டி55 ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2024ம் ஆனது இறுதியில் நடைபெற்றிருந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த நிலையில், சமீப காலமாக இதன் தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. அதன்படி இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டி55 படமானது முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

ராஜ்குமாரின் இயக்கத்தில் வெளியான அமரன் படத்தில் அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகள் பல இடம்பெற்றிருந்த நிலையில், இந்த டி55 படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தனுஷின் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு பின் உருவாகும் முழு ஆக்ஷ்ன் படமாக இந்த டி55 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் மற்றும் கதாநாயகி தொடர்பான தகவல் இணையத்தில் உலா வருகிறது. அதன்படி இப்படத்தின் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு ட்ரென்டிங் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்  இசையமைப்பதாகவும் இணையாயத்தில் தகவல்கள் வெளியாகிவருகிறது.

இந்த டி54 மற்றும் டி55 படங்களை தொடர்ந்து தனுஷின் நடிப்பில் பல்வேறு படங்கள் உருவாகிவருகிறது. இந்த 2025ம் ஆண்டில் 3வது படமாக தேரே இஷ்க் மெய்ன் வரும் 2025 நவம்பர் இறுதியில் வெளியாகிறது. இப்படத்தை அடுத்ததாக அப்துல்கலாம் பயோபிக், இளையராஜா பயோபிக் மற்றும் இந்தியில் புதிய படம் என தனுஷின் நடிப்பில் தொடர்ந்து பல்வேறு படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *