சர்வதேச விண்வெளியில் குட்டி ஒலிம்பிக் விளையாடும் விண்வெளி வீரர்கள் - நாசா பகிர்ந்த காணொளி!

top-news
FREE WEBSITE AD

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 ஆம் தேதி ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் விளையாடிய காணொளி ஆச்சர்யமூட்டும் வகையில் உள்ளது.

பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் விண்வெளி வீரர்கள், ஒலிம்பிக் போட்டியை சிறப்பிக்கும் வகையில், நாசா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த காணொளியில் குட்டி ஒலிம்பிக் என குறிப்பிட்டு அவர்கள் ஒலிம்பிக் விளையாட்டுகளை விளையாடுவதை பார்க்க முடிகிறது . மேலும் அங்கு புவியீர்ப்பு விசை இல்லாத போது, எடையுள்ள ஒரு பொருளை நகர்த்துவது மிகவும் சுலபம் என்பதால், அவர்கள் எளிதாக பளுதூக்குதல்,ஓட்ட பந்தயம்,ஜிம்னாஸ்டிக், மற்றவர்களை தூக்குவது, குண்டு எறிதல் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதை பார்க்க முடிந்தது.மேலும், விண்வெளியில் தண்ணீர் மிதக்கும் காட்சியையும், அதை பறந்து கொண்டே குடிக்கும் காட்சியையும் பார்க்கும் போது வேடிக்கையாகவும்,வியப்பாகவும் இருந்தது.

போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் உள்ள சிக்கல்கள் காரணமாக, நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நீண்ட காலம் தங்கியிருக்கின்றனர். இதனால், அவர்கள் மீண்டும் பூமி திரும்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் இந்த தருணத்தில், சோகத்திலும் விண்வெளி வீரர்கள் மகிழ்ச்சிகரமாக விளையாடுவதை பார்க்கும் போது , அவர்களின் தைரியத்தையும், மனவலிமையும் உணரமுடிகிறது.விண்வெளி வீரர்கள் விளையாடும் இந்த சுவாரஸ்யமான குட்டி ஒலிம்பிக் காணொளியை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளதை பலரும் பாராட்டி ரசித்து வருகின்றனர்...

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *