ஆந்திராவில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை சரிவு: ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு
- Surendran Sumdraraj
- 24 Aug, 2026
ஐதராபாத்: ஆந்திரப் பிரதேசத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி மாநில அரசைக் குற்றம் சாட்டியுள்ளார்.
தனியார் பள்ளிகளில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு மாறியுள்ளதாக ஆந்திர மாநில அரசு கூறியிருந்தது. ஆனால், அந்தக் கூற்றை 2025-26 கல்வியாண்டுக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பின் தரவுகள் மறுப்பதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட அவர், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உண்மையில் கடுமையாகச் சரிந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
மாநில அரசு வெளியிட்டு வரும் புள்ளிவிவரங்களுக்கும், அதிகாரப்பூர்வ கல்வித் தரவுகளுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அதிகளவில் அரசு பள்ளிகளுக்கு வந்துள்ளதாகக் கூறுவது உண்மையான நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



