10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மாணவர் தற்கொலையும் கல்வி வணிகமும் அதிகரித்துள்ளது – மாணிக்கம் தாகூர்
- Surendran Sumdraraj
- 27 Jul, 2026
சென்னை, ஜூலை 27-
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பாஜக ஆட்சியில் மாணவர் தற்கொலைகளும், கல்வி வணிகமயமாக்கலும் உச்சத்தை எட்டியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு மற்றும் மத்திய அரசின் கல்விக் கொள்கைகள் மாணவர்களின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் குறிப்பிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2014-ஆம் ஆண்டு 8,068 ஆக இருந்த மாணவர் தற்கொலை எண்ணிக்கை, 2024-ஆம் ஆண்டில் 14,488 ஆக உயர்ந்துள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் 1.23 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், தேர்வுத் தோல்வி அச்சத்தால் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், தனியார் பயிற்சி மையங்களின் ஆதிக்கம் கல்வியை வணிகமாக மாற்றியுள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



