சூடானில் ராணுவ டிரோன் தாக்குதல்: பொதுமக்கள் 35 பேர் உயிரிழப்பு

top-news
FREE WEBSITE AD

கார்டூம், ஆக. 4-

சூடான் நாட்டில் ராணுவம் நடத்தியதாகக் கூறப்படும் டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் வடக்கு டார்பர் மாகாணத்தில் உள்ள ஹரா அல் சவியா கிராமத்தில் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையான விரைவு ஆதரவு படைக்கும் (RSF) இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் கடும் மோதல் நீடித்து வருகிறது. இந்த உள்நாட்டு மோதலில் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹரா அல் சவியா கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியை குறிவைத்து ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் கூட்டத்தில் பங்கேற்ற 35 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *