டிரம்ப் பேசும் போது திடீரென எழுந்த கோஷம்-இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பரபரப்பு!

top-news
FREE WEBSITE AD

காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இறுதிக்கட்ட ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாக உள்ள நிலையில்.இதற்கு முன்னோட்டமாக இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாராட்டும் வகையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்பும் பங்கேற்று பேசினார். டிரம்ப் பேசும் போது திடீரென கோஷம் எழுப்பப்பட்டது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் மூண்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த போரால் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகினர். காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் வாழ்வாதாரத்தை இழந்து கடும் இன்னல்களை சந்தித்தனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நீடித்து வந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டார். அதன்படி அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தல் பத்தா அல்-சிசி ஆகியோரின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேலில் டிரம்பிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது, "வானம் அமைதியாக உள்ளது. துப்பாக்கி குண்டுச் சத்தங்கள் ஓய்ந்துவிட்டன. வரலாற்று சிறப்பு மிக்க விடியல் வரப்போகிறது" என்றார்.

டிரம்ப் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த போது, அவருக்கு எழுந்து நின்று எம்பிக்கள் வரவேற்பு அளித்தனர். இதற்கிடையே, டிரம்பிற்கு எதிராக இடதுசாரி எம்பி போராட்டத்தில் ஈடுபட்டார். இஸ்ரேல் எம்பி ஒஃபேர் காஸ்சிப் மற்றும் அய்மன் ஒடே ஆகியோர் "இனப்படுகொலை" என கோஷம் போட்டனர். உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள் இருவரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.

அப்போது டிரம்ப், "மிகவும் திறமை வாய்ந்த நபர்" என்று கூறியதும் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது. அதேபோல் "பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும்" என்ற போஸ்டர்களையும் இடதுசாரி எம்பி ஒருவர் காட்டினார். இதனால் டிரம்ப் பேசும் பொழுது இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *