அமைதி பேரணியில் தற்கொலை தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு; பாகிஸ்தானில் பெரும் சோகம்

top-news
FREE WEBSITE AD

இஸ்லாமாபாத், ஆக. 3-

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் மாவட்டத்தில் நடைபெற்ற அமைதி பேரணி அருகே நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிரவாத வன்முறைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து நடத்திய அமைதி பேரணி, கபால் போலீஸ் நிலையம் அருகே நடைபெற்றது. பேரணி முடிந்து மக்கள் கலைந்து செல்லும் நேரத்தில், தற்கொலைப்படை தாக்குதலாளர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் போலீசார் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *