‘சுதேசி’, ‘மேக் இன் இந்தியா’ வெறும் விளம்பர நாடகம்’ – மாணிக்கம் தாகூர் விமர்சனம்

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஆக. 5-

 ‘சுதேசி’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் வெறும் விளம்பர நாடகம் மட்டுமே என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கனரக கிரேன்களுக்கு (Heavy Cranes) எதிர்-டம்பிங் வரி (Anti-Dumping Duty) விதிக்க, வெளிநாட்டு வர்த்தக தீர்வுகள் இயக்குநரகம் (DGTR) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே பரிந்துரை செய்திருந்தாலும், அதற்கான சுங்க அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் இதுவரை வெளியிடாமல் இழுத்தடித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

இதன் விளைவாக, இந்தியாவின் முன்னணி ஐந்து கிரேன் உற்பத்தி நிறுவனங்கள் தொழிலை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்திய உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்கு பதிலாக சீன நிறுவனங்களுக்கு மத்திய அரசு மறைமுகமாக ஆதரவளிக்கிறதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *