டொராண்டோ டபிள்யூடிஏ 1000 பட்டத்தை வென்ற இகா ஸ்வியாடெக்

top-news
FREE WEBSITE AD

டொராண்டோ, ஆக.14 —

முன்னாள் உலகின் முதல் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக், 2026ஆம் ஆண்டுக்கான தனது முதல் பட்டத்தை வென்றார். டொராண்டோவில் நடைபெற்ற டபிள்யூடிஏ 1000 இறுதிப்போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான எலெனா ரிபாகினாவை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அவர் சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.

போலந்து வீராங்கனையான 25 வயது ஸ்வியாடெக், இந்த வெற்றியை வெறும் 75 நிமிடங்களில் பதிவு செய்தார். போட்டி முழுவதும் சிறப்பான கட்டுப்பாட்டுடன் விளையாடிய அவர், ரிபாகினாவுக்கு அதிக வாய்ப்புகளை வழங்காமல் ஆதிக்கம் செலுத்தினார். ரிபாகினா போட்டியின் போது சோர்வுடன் காணப்பட்டதுடன், பல தவறுகளையும் செய்தார்.

2026ஆம் ஆண்டில் இதற்கு முன்பு எந்தவொரு போட்டியின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறாத ஸ்வியாடெக்கிற்கு, டொராண்டோ வெற்றி முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. விம்பிள்டன் பட்டத்தைத் தக்கவைக்கும் அவரது முயற்சியும் மூன்றாவது சுற்றிலேயே முடிவடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் ஸ்வியாடெக் தனது தொழில்முறை வாழ்க்கையின் 26ஆவது பட்டத்தையும், 12ஆவது டபிள்யூடிஏ 1000 பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் டபிள்யூடிஏ 1000 பட்டங்களின் எண்ணிக்கையில் அவர் செரீனா வில்லியம்ஸுக்கு அடுத்த நிலையில் உள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *