சுவிட்சர்லாந்து நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி!

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

கொசோவோ, நவ. 19-

சுவிட்சர்லாந்து அணி இன்று அதிகாலை கொசோவோவுடன் 1-1 கோல்கணக்கில் சமநிலை பெற்ற போதிலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2026 உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றது.

குழு பி-யில் ஒரு தோல்வி கூட இன்றி 14 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்தது சுவிட்சர்லாந்து. ரூபன் வர்காஸ் முதல் பாதியில் அபாரமான கோலை அடித்து முன்னிலை தந்தார். ஆனால் இரண்டாம் பாதியில் பிளோரன்ட் முஸ்லிஜாவின் அற்புதமான தூரத் தாக்கல் கோலாக மாற, போட்டி சமநிலையில் முடிந்தது.

கொசோவோ 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து, வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐரோப்பிய பிளே-ஆப் வாய்ப்பைப் பெற்றது. உலகக் கோப்பையில் முதல் முறையாக விளையாடும் கனவை அவர்கள் இன்னும் கைவிடவில்லை.

போட்டிக்குப் பின் சுவிஸ் தற்காப்பு ஆட்டக்காரர் ரிக்கார்டோ ரோட்ரிகஸ், நாங்கள் மோசமாக விளையாடவில்லை. ஆனால் அவர்கள் எங்களை முந்த வேண்டுமானால் ஆறு கோல்கள் அடிக்க வேண்டும் என்று தெரியும். எங்களை வெல்வது அவ்வளவு எளிதல்ல என்றார்.

சுவிட்சர்லாந்து ரசிகர்கள் இன்று நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *