மீண்டும் PKR-ல் அஸ்மின் அலியா?!
- Shan Siva
- 26 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 26: முன்னாள் தலைவர்களையும் தொண்டர்களையும் கட்சியில் மீண்டும் சேருமாறு அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்த போதிலும், தனது முன்னாள் கட்சிக்குத் திரும்புவதை PKR முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலி நிராகரித்துள்ளார்.
ஷெரட்டன் நகர்வில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அஸ்மின் 2020-ல் PKR கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நகர்வின் காரணமாக பெர்சாத்து கட்சி பக்காத்தான் ஹரப்பானிலிருந்து வெளியேறி, இறுதியில் PH அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
சமீபகாலமாக பெர்சாத்து கட்சி பல போராட்டங்களைச் சந்தித்த போதிலும், கட்சியின் பொதுச் செயலாளரான அஸ்மின், தனது அரசியல் வாழ்க்கைக்கு பெர்சாத்து கட்சியே சிறந்த தளம் என்று கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
பெர்சாத்துவின் காலம் வரும். அது நேர்மையுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று உலு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



