பக்காத்தான் நிதி மக்களுக்கு ; அம்னோ நிதி நஜீப்பிற்கு! – பி.கே.ஆர் பொதுச் செயலாளர் கிண்டல்!
- THINAGAREN SANGGAREN
- 21 Sep, 2026
செப்டம்பர் 21,
பக்காத்தானின் நிதி சேகரிப்பு என்பது மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் அம்னோவின் நிதி நஜீப்பிற்காகச் செலவிடப்படுகிறது என பி.கே.ஆர் பொதுச் செயலாளர் Datuk Dr Fuziah Salleh தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு விதிக்கப்பட்டிருக்கும் அபராதத்தைச் செலுத்தும் பொறுப்பை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சி திரட்டுகிறது என Datuk Dr Fuziah Salleh கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
நஜீப்பின் 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த அம்னோவிடமும் நாட்டு மக்களிடமும் அம்னோ நிதியை வசூலிக்கிறது. ஆனால் பக்காத்தான் வசூலித்திருக்கும் நிதி என்பது முழுக்க முழுக்க அரசாங்கத்திற்காகவும் நாட்ட்டு மக்களுக்காகவும் மட்டுமே செலவிடப்படும் என Datuk Dr Fuziah Salleh தெரிவித்தார். நஜீப்பிற்காக அம்னோ திரட்டும் நிதிக்கும் அரசாங்கத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதையும் Datuk Dr Fuziah Salleh உறுதிப்படுத்தினார். விருப்பமுள்ளவர்கள் மட்டுமே அம்னோவின் வங்கியில் நேரடியாகப் பணத்தைச் செலுத்துகிறார்கள். இது குறிப்பிட்ட அந்த கட்சியின் உள்விவகாரம் என Datuk Dr Fuziah Salleh தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

