சிபிஐ, சிபிஎம் உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவு: வட்டாட்சியர் மீது அன்புமணி கண்டனம்

top-news
FREE WEBSITE AD

சென்னை: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் விவரங்களைச் சேகரிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

குஜிலியம்பாறை வட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள சிபிஐ, சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் விவரங்களைச் சில மணி நேரங்களுக்குள் சேகரித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அதிகார அத்துமீறல் என விமர்சித்துள்ள அன்புமணி, எந்தக் காரணமும் இல்லாமல் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை குற்றவாளிகளைப் போன்று கருதி அவர்களின் தனிப்பட்ட விவரங்களைச் சேகரிப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *