“ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்... மிரட்டல்களுக்கு தி.மு.க. பயப்படாது” – உதயநிதி

top-news
FREE WEBSITE AD

சென்னை: தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளும் தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து பேசினார். அப்போது, ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மிரட்டல்களுக்கு தி.மு.க. பயப்படாது என்றும் தெரிவித்தார்.

சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் மேஜையில் சில கோப்புகள் இருப்பதாகவும், அவற்றை திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்று அவர் கூறியதாகவும் குறிப்பிட்டார். அந்த கோப்புகளை திறந்து பார்த்து, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“எதற்காக பயப்படுகிறீர்கள்? ஏன் காலதாமதம் செய்கிறீர்கள்? ஜோதிடர் சொன்னால்தான் கோப்புகளைத் திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், ஆளுங்கட்சியினர் தி.மு.க. மீது ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் உதயநிதி குற்றம்சாட்டினார். சட்டசபையில் பாடல்கள் பாடப்படுவதால், இது சட்டசபையா அல்லது “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியா என சந்தேகம் ஏற்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *