அம்பாங்கில் நிலச்சரிவு! 18 குடும்பங்கள் பாதிப்பு! 300 பேர் வெளியேற்றம்!

top-news

அம்பாங்கில் உள்ள TAMAN MELAWATI அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11.45 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக சீலாங்கூர் மீட்புப் படை உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mokhtar தெரிவித்தார். கடுமையான மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் மரங்கள் சரிந்து வீடுகளின் மீது விழுந்ததால் சில வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எந்தவோர் உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 18 குடும்பங்களைத் தற்காலிகமாகச் சம்மந்தப்பட்ட பகுதியிலிருந்து வெளியேற்றி உள்ளதாகவும், வெளியேற்றப்பட்ட 300 பேரும் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சீலாங்கூர் மீட்புப் படை உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mokhtar தெரிவித்தார். சுமார் 30 மீட்டர் உயரத்திலிருந்து நிலம் சரிந்ததாகவும் 4 நிமிடங்களுக்கும் மேல் இடைவிடாது மண் சரிந்ததாகக் குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளன

tanah runtuh berhampiran Jalan E6, Taman Melawati menyebabkan kira-kira 300 penduduk dari 18 rumah diarah berpindah segera. Penolong Pengarah Operasi Jabatan Bomba dan Penyelamat Selangor, Ahmad Mukhlis Mokhtar berkata, insiden tidak melibatkan mangsa, namun pergerakan tanah masih berlaku di lokasi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *