தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானம்: கமல்ஹாசன் வரவேற்பு
- Surendran Sumdraraj
- 11 Aug, 2026
சென்னை, ஆக. 11-
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தனித்தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் எம்.பியுமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று முதலமைச்சர் விஜய் இந்தத் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக முதலில் பாடப்பட வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.
இந்தத் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இந்தத் தீர்மானத்தை வரவேற்று கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்றும், இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத இந்தப் போக்கு தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



