ஆஸ்திரேலிய ஓபன் கிண்ணத்தை வென்று மலேசிய ஜோடி சாதனை
- Tamil Malar (Reporter)
- 24 Nov, 2025
செய்தி- வெற்றி மைந்தன்
கோலாலம்பூர், வ. 24-
மலேசியாவின் நம்பர் 1 கலப்பு இரட்டையர் ஜோடி சென் டாங் ஜீ - தோ ஈ வேய் இந்த ஆண்டு நீண்ட நெடிய காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, உலக சுற்றுப்பயணத்தில் தங்களது முதல் பட்டத்தை வென்றெடுத்தனர். சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓப்பன் 2025 இறுதிப் போட்டியில் அவர்கள் அபார வெற்றி பெற்றனர்.
உலக தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள இந்த ஜோடி, போட்டியின் முதல் விதையாக களமிறங்கியது. இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவின் ஜாபர் ஹிடாயத்துல்லா - பெலிஷா பசாரிபு ஜோடியை இரண்டு செட்களில் வீழ்த்தினர். முதல் செட் 21-15, இரண்டாவது செட் 21-17 என்ற கணக்கில் வென்று, தங்களது ஆதிக்கத்தை நிரூபித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



