சென் தாங் ஜீ-தோ ஈ வெய் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்
- Tamil Malar (Reporter)
- 22 Nov, 2025
செய்தி- வெற்றி மைந்தன்
கோலாலம்பூர், நவ. 22-
மலேசியாவின் நம்பர் 1 கலப்பு இரட்டையர் ஜோடி சென் தாங் ஜீ-தோ ஈ வெய் இந்த ஆண்டு உலக சுற்றுப்பயணத்தில் தங்களது முதல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவை உயிரூட்டியுள்ளனர். இன்று ஆஸ்திரேலியா ஓபன் அரையிறுதியில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
சிட்னி ஒலிம்பிக் பார்க்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், உலக தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள இந்த மலேசிய ஜோடி, இந்த ஆண்டு மட்டுமே புதிதாக இணைந்த தாய்லாந்து ஜோடி பக்கபோன் தீரரட்சகுல்-சப்சிரீ தேரட்டனச்சையை ஸ்ட்ரெய்ட் செட் மூலம் வீழ்த்தியது.
வெறும் 50 நிமிடங்களில் முடிவடைந்த இப்போட்டி, இரு ஜோடிகளுக்கும் இடையிலான முதல் மோதலாகும்.
முதல் செட்டை சுலபமாக கைப்பற்றிய தாங் ஜீ-ஈ வெய் ஜோடி, இரண்டாவது செட்டில் சற்று பரபரப்பான தருணங்களை ரசிகர்களுக்கு வழங்கியது. இருப்பினும், அழுத்தத்தை தாங்கி அபாரமாக மீண்டு வெற்றியை உறுதி செய்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



