“தயவு செய்து உங்க விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்க...” – கையெடுத்து கும்பிட்டு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த விஜய்
- Surendran Sumdraraj
- 22 Apr, 2026
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் தனது இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் உணர்ச்சி மிகுந்த வேண்டுகோளை முன்வைத்தார். மக்களிடம் நேரடியாக பேசிய அவர், “உங்கள் குடும்பத்தினருக்கும் சொல்லுங்கள்... விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார். குறிப்பாக குழந்தைகள் மற்றும் குடும்பங்களை நோக்கி உரையாற்றிய விஜய், தன்னை ஒரு அரசியல்வாதியாக அல்லாது, குடும்பத்தின் ஒருவராகவே பார்க்கும்படி வலியுறுத்தினார்.
பிரசாரத்தின் போது, “இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுத்தது அங்கு இருந்த ஆதரவாளர்களை உணர்ச்சிவசப்படுத்தியது. தேர்தலில் வெற்றி பெற்றால், மக்களின் நம்பிக்கையை நிறைவேற்ற உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
விஜய் தனது கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் மக்களின் குடும்பத்தினரே என்று கூறி, அவர்களுக்கு வாக்களிப்பது தங்களுக்கு தாமே வாக்களிப்பது போன்றது என விளக்கினார். மேலும், வீட்டின் வாசலில் ‘விசில்’ சின்னத்தை கோலமாக இடுமாறு கேட்டுக்கொண்டு, அது தான் அவருக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆதரவாக இருக்கும் என்றார்.
இந்த தேர்தலில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் விஜய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



