SUBANG JAYA'வில் துப்பாக்கிச் சூடு! காவல் துறை விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

சுபாங் ஜெயாவில் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, சுபாங் ஜெயா மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat இன்று விளக்கமளித்தார். சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் நடவடிக்கையானக் காகங்களை சுடும் நடவடிக்கையின் தொடர்ச்சி இது என தெரிவித்தார்.

இது சிலாங்கூர் மாநிலக் காவல்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்றும் சம்மந்தப்பட்ட காணொலி தவறான புரிதலைக் கொண்டுள்ளதாகவும் காவல் துறையால் பயிற்சி வழங்கப்பட்ட அதிகாரிகள் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சம்மந்தப்பட்ட ஆடவர் பயன்படுத்திய துப்பாக்கியில் நெகிழி குண்டுகள் பயன்படுத்தியதாகவும், காவல் துறையினரின் பாதுகாப்புடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக Wan Azlan Wan Mamat தமது விளக்க அறிக்கையின் மூலமாகத் உறுதிப்படுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *