549 ஆபாசத் தளம் & 69 பாலியல் தளங்கள் முடக்கம்! MCMC அதிரடி! - Teo Nie Ching

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 24: இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 549 ஆபாச மற்றும் 69 பாலியல் இணையதளங்களை மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான  (MCMC) முடக்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் தொடர்புத் துறை துணை அமைச்சர் TEO NIE CHING தெரிவித்தார்.

இதே காலகட்டத்தில், MCMC சமூக ஊடக தள வழங்குநர்களுடன் இணைந்து, X மற்றும் Telegram உட்பட பல்வேறு தளங்களில் இருந்து 308 ஆபாசப் பொருட்கள் மற்றும் 838 பாலியல் தொடர்பான உள்ளடக்கங்களை அகற்றியதாகத் தொடர்புத் துறை துணை அமைச்சர் TEO NIE CHING தெரிவித்தார்

அமலாக்க நடவடிக்கைகள் குறித்து, ஆபாச உள்ளடக்கம் சம்பந்தப்பட்ட ஏழு வழக்குகள் MCMC ஆல் இன்னும் விசாரணையில் உள்ளன. அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கண்காணிப்பு மற்றும் புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் தொடரும், என கேள்வி-பதில் அமர்வின் போது தொடர்புத் துறை துணை அமைச்சர் TEO NIE CHING விளக்கமளித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *