சுக்மா ஸ்குவாஷ்: தனுசா, வா செர்ன் முதல் முறையாக சாம்பியன்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 18-

மலாக்காவைச் சேர்ந்த யு தனுசா, சுக்மா விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் ஸ்குவாஷ் பிரிவில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அஸ்தாகா அரங்கில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், இரண்டாம் நிலை வீராங்கனையான தனுசா, கெடாவைச் சேர்ந்த முதல்நிலை வீராங்கனை கே. செவீத்ராவை 11-7, 13-11, 11-7 என்ற புள்ளிக் கணக்கில் 29 நிமிடங்களில் வீழ்த்தி பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதியில், சரவாக்கைச் சேர்ந்த விட்னி இசபெல் வில்சனிடம் தனுசா கடுமையான சவாலை எதிர்கொண்டார். முதல் ஆட்டத்தை 8-11 என இழந்த அவர், பின்னர் சிறப்பாக விளையாடி 13-11, 11-4, 11-13, 11-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அந்த ஆட்டம் 42 நிமிடங்கள் நீடித்தது.

இதனிடையே, ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் பேராக்கைச் சேர்ந்த லோ வா செர்னும் முதல் முறையாக சுக்மா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இறுதிப் போட்டியில் சிலாங்கூரைச் சேர்ந்த எம். நிகிலேஸ்வரை 11-6, 11-5, 11-4 என்ற நேர் ஆட்டக் கணக்கில் 35 நிமிடங்களில் வீழ்த்தி வா செர்ன் வெற்றி பெற்றார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *