ஆடி நான்காம் வெள்ளி
- Surendran Sumdraraj
- 06 Aug, 2026
ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமை என்பது சக்தியின் வடிவமான காமாட்சி அம்மன் மற்றும் பார்வதி தேவியை வழிபட மிகவும் உகந்த நாளாகும். இந்நாளில் அம்மனை வழிபடுவதால் குடும்ப ஒற்றுமை பெருகும், தீய சக்திகள் விலகும், திருமணத் தடைகள் அகலும் மற்றும் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.
ஆடி மாத வெள்ளிக்கிழமை பற்றி சிறப்பு:
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு தனிச்சிறப்புண்டு. இம்மாத வெள்ளிக்கிழமைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட.
பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் மட்டுமின்றி, இம்மாதத்தில் அம்மனின் சக்தி இருமடங்காக இருக்கும்.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் திருமணமான பெண்கள் விரதமிருந்தால், மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.
அதுமட்டுமின்றி, இம்மாத வெள்ளிக்கிழமைகளில் யார் அம்மனை வேண்டி விரதமிருந்தாலும், அவர்கள் நினைப்பது நிறைவேறும்.
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அம்மனுக்கு உகந்தது.
நான்காம் வெள்ளிக்கிழமை
ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையானது காமாட்சி அம்மனுக்கு உகந்தது.
இவர் சக்தியின் ஓர் வடிவம்.
இவரை ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையின் போது வணங்கினால், நம்மை சுற்றியுள்ள
தீய சக்தி நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஐந்தாம் வெள்ளிக்கிழமை
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி விஷ்ணு பகவானின் மனைவியான மகாலட்சுமிக்கு உரியது.
இந்த கடைசி வெள்ளிக்கிழமையின் போது தான் வரலட்சுமி பூஜை நடைபெறும். இந்த பூஜை திருமணமான பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.
திருமணமான பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரித்து, நீண்ட நாட்கள் சுமங்கலியாக இருப்பதற்கு, ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையின் போது நோன்பு இருந்து, மகாலட்சுமிக்கு பூஜை செய்து, படையல் படைத்து, சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பார்கள்.
ஆடி வெள்ளியன்று மறந்தும் இந்தப் பொருட்களை வாங்காதீர்கள்!
பொதுவாக வெள்ளிக்கிழமை ஆன்மிக வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகும். அதுவும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் சில விஷயங்களை செய்யலாம். சில குறிப்பிட்ட விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
செய்ய வேண்டியவை :
* ஆடி வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்தால் தனலாபம் கிடைக்கும்.
* ஆடி வெள்ளிக்கிழமையில் பசுவிற்கு பூஜை செய்வது மிகவும் சிறப்பான பலன்களை தரும்.
* ஆடி வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு கண்டிப்பாக பூ, குங்குமம், மஞ்சள், புடவை அல்லது ஜாக்கெட் பிட் கொடுத்து அனுப்ப வேண்டும். உங்களால் முடிந்த அளவு உணவு தானம் செய்ய வேண்டும்.ஆடி வெள்ளியன்று புதிய வீட்டிற்கு பால் காய்ச்சுவதோ அல்லது வாடகை வீட்டிற்கு குடிபோவதோ கூடாது.ஆடி வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிப்பதாலும் வீட்டில் செல்வம் சேரும் .வெள்ளிக்கிழமை கல் உப்பினை வாங்கினால், நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்பது நம்பிக்கை.
* ஆடி மாதம் முழுவதும் சுப காரியங்களைத் தவிர்ப்பது வழக்கம். குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுப நிகழ்வுகளைப் பேசவோ அல்லது செய்யவோ கூடாது.
செய்யக்கூடாதவை
ஆடி மாதம் முதல் நாளில் சில பொருட்களை வாங்கக் கூடாது. ஆடி மாதம் முதல் நாள் மங்களகரமான பொருட்களை வாங்கி நன்மைகளை பெறுவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு சில பொருட்களை தவறியும் கூட வாங்கி விடக்கூடாது. அந்த வகையில் இந்தாண்டு ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று பிறப்பதால் அன்றைய தினம் இரும்பு பொருட்கள், கத்திரிக்கோல், ஊசி மற்றும் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை மறந்தும் கூட விலைக்கு வாங்காதீர்கள்.
* கருப்பு நிற ஆடைகள் அல்லது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய உடைந்த, பழைய பொருட்களை வாங்குவதையும் முற்றிலும் தவிர்க்கவேண்டும். இவை குடும்பத்தில் தேவையற்ற சண்டைகளையும், பண நஷ்டத்தையும், துரதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்வெள்ளிக்கிழமையன்று முடி வெட்டவோ, நகம் வெட்டவோ கூடாதுஈரத்துணி அணிந்துக் கொண்டும், ஈரமான தலையுடனும் பூஜை செய்யக்கூடாது.
* கூந்தலை விரித்து போட்டு இருக்கக்கூடாது.
* ஆடி வெள்ளிக்கிழமை அசைவம் சாப்பிடக்கூடாது. மது மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிக்கக்கூடாது.
* வீட்டில் விளக்கு ஏற்றிய பின்பு உப்பு, தயிர், ஊசி மற்றும் பணம் போன்றவற்றை யாருக்கும் கடனாகக் கொடுக்கவோ வாங்கவோ கூடாது.
* ராகு கால நேரத்தில் வீட்டில் விளக்கேற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.
* இரவு நேரத்தில் வீட்டைப் பெருக்கி குப்பையை வெளியில் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
* பூஜை செய்யத் தேவையான பொருட்களை வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்யக் கூடாது.
* வெள்ளக்கிழமை மாலை நேரத்தில் வீட்டை இருள் சூழ்ந்ததாக வைத்திருக்கக் கூடாது.வெள்ளிக்கிழமையில் அழுக்கு துணிகளை சேர்த்து வைக்கக் கூடாது. கடன் சுமை அதிகரிக்கும்.
ஆடி வெள்ளி கிழமையில் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகு காலமாகும். அதனால் வழிபாடு மேற்கொள்பவர்கள் காலை 9.15 மணி முதல் 10.15 வரையும், மாலையில் 04.45 மணி முதல் 05.45 மணி வரையும் வழிபாடு செய்யலாம்.
ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழைகளிலும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையிலாவது வழிபாடு செய்யலாம். திருமணத் தடை, குழந்தை பாக்கியம், மாங்கல்ய தோஷம் முதலானவை நீங்கி நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் வல்லமையை அன்னை பராசக்தி அருளிடுவாள்.
லட்சுமி சுப்பிரமணியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



