‘நினைவுச் சின்னத்தை அகற்றலாம்; திலீபனைத் தமிழர்களின் நினைவிலிருந்து அகற்ற முடியாது’ – வேல்முருகன்

top-news

சென்னை: யாழ்ப்பாணம் நல்லூரில் திலீபனின் 39-ஆவது ஆண்டு நினைவேந்தல் நடைபெற்ற நிலையில், அவரது நினைவிடத்தில் நிறுவப்பட்டிருந்த உருவச் சிலையை இலங்கை காவல்துறையினர் அகற்றியதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், 1987 செப்டம்பர் 15-ஆம் தேதி நல்லூரில் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதாகவும், தமிழர்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி 12 நாட்கள் உணவும் நீரும் அருந்தாமல் இருந்து செப்டம்பர் 26-ஆம் தேதி உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டார். இந்தப் போராட்டம் 1987 இந்தியா–இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுடன் தொடர்புடையது என்றும் அவர் தெரிவித்தார்.

உலகின் பல நாடுகளில் திலீபனுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில், அவரது சொந்த மண்ணில் நினைவுச் சின்னம் அகற்றப்படுவது கவலைக்குரியது என வேல்முருகன் கூறினார். தமிழர்களின் நினைவேந்தல் உரிமை முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் இலங்கை அரசிடம் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும், இலங்கை அரசு சம்பவம் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *