4 நாட்களில் இத்தனை கோடியா? – வசூல் வேட்டையில் ‘தி ஒடிசி’

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூலை 21-

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள ‘தி ஒடிசி’ திரைப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான நான்கு நாட்களிலேயே இப்படம் இந்தியாவில் ரூ.80 கோடி வசூல் சாதனையை கடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரேக்க காவியமான ‘ஒடிசி’யை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் மேட் டேமன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். பிரம்மாண்டமான காட்சிகள், ஐமேக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் நோலனின் இயக்கம் ஆகியவை ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தன.

உலகளவில் வெளியான முதல் வார இறுதியில் ‘தி ஒடிசி’ சுமார் 264 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்துள்ளது. இது கிறிஸ்டோபர் நோலனின் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய தொடக்க வசூலாக அமைந்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *