விண்வெளியில் இருந்து ஐபோன் மூலம் படம் பிடிக்கப்பட்ட பசிபிக் பெருங்கடல்: வியப்பில் உலகம்
- Surendran Sumdraraj
- 03 Aug, 2026
வாஷிங்டன், ஆக. 3-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பணியாற்றி வரும் நாசா விண்வெளி வீரர் அனில் மேனன், ஐபோன் மூலம் விண்வெளியில் இருந்து பசிபிக் பெருங்கடலைப் படம் பிடித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
விண்வெளி நிலையத்தின் 'குபோலா' பார்வை சாளரத்தின் வழியாக எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், நீல நிறத்தில் பரந்து விரிந்த பசிபிக் பெருங்கடலும், அதன் மீது உருவாகியுள்ள மேகக் கூட்டங்களும் மிகவும் தெளிவாக பதிவாகியுள்ளன. சாதாரண ஸ்மார்ட்போனான ஐபோன் மூலம் இத்தகைய உயர்தர புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பது தொழில்நுட்ப உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Ragubarath
Wau super



