கவின், நயன்தாரா நடித்த ‘ஹாய்’ படத்தின் 2-ஆவது பாடல் வெளியீடு
- Surendran Sumdraraj
- 23 Jul, 2026
சென்னை, ஜூலை 23-
நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ரசிகர்களிடையே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘ரசகுல்லா’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்தப் பாடலை பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல், காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கவின்–நயன்தாரா இடையேயான காதல் காட்சிகள், இனிமையான இசை மற்றும் வண்ணமயமான காட்சியமைப்புகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. திரைப்படத்தின் இசை ஆல்பம் மீதான எதிர்பார்ப்பையும் இந்தப் பாடல் மேலும் அதிகரித்துள்ளது.
பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் ‘ஹாய்’ திரைப்படத்தில் கவின், நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபு, ராதிகா சரத்குமார், கே. பாக்யராஜ், வி.டி.வி. கணேஷ், சத்யன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையை ஜென் மார்ட்டின் அமைத்துள்ள நிலையில், ஒளிப்பதிவை ராஜேஷ் ஷுக்லா மேற்கொண்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



