களவு போன மரகத முருகர் சிலையை உடனடியாக மீட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
- Surendran Sumdraraj
- 03 Sep, 2026
சென்னை, செப். 3 –
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெருங்கரணை தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் களவு போன மரகத முருகர் சிலையை உடனடியாக மீட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், விலைமதிப்பற்ற 2.5 அடி உயர மரகத முருகர் சிலை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோவில்கள் மற்றும் சிலைகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டிய நயினார் நாகேந்திரன், கோவில்களில் நவீன கண்காணிப்பு கருவிகள் மற்றும் தேவையான பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மரகத முருகர் சிலை திருட்டு தொடர்பாக உடனடியாக தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், சிலையை மீட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



