வித்யுத் ஜம்வால் நடித்த ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீடு

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 3 –

பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஹாலிவுட் அதிரடி திரைப்படமான ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ படத்தின் புதிய தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வித்யுத் ஜம்வாலின் அதிரடி சண்டைக் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன.

பிரபல வீடியோ கேம் நிறுவனமான கேப்காமின் புகழ்பெற்ற ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ விளையாட்டு தொடரை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘துப்பாக்கி’, ‘அஞ்சான்’, ‘மதராஸி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வித்யுத் ஜம்வால், இப்படத்தில் தல்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்ற வித்யுத், தல்சிம் கதாபாத்திரத்தின் யோகா சார்ந்த உடல் அசைவுகளையும், தனித்துவமான சண்டை பாணியையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *